புதிய படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலங்கள்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

பிக்பாசில் அவரோடு கலந்துகொண்ட மகத் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார். இவர் ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். ரொமாண்டிக் காமெடி கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

மகத் தற்போது சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.