டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதும் கணக்குகளை முடக்குவதும் அதிகரித்து வருகிறது.

Print yarlcine.com in சினிமா செய்திகள்

  சமூக வலைத்தளத்தில் தனது பெயரில் போலி கணக்கு இருப்பதாக நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகைகள் பெயரில் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதும் அவர்களின் உண்மையான கணக்குகளை முடக்குவதும் அதிகரித்து வருகிறது. இதனை அவர்கள் கண்டித்தாலும் நிறுத்தியபாடில்லை. சமீபத்தில் நடிகைகள் குஷ்பு, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், சுவாதி உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர்.நடிகை பாவனாவும் தனது பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி இருப்பதாகவும் முகநூலில் நான் இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் பிரபல முன்னாள் கதாநாயகி அம்பிகா தனது பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி இருப்பதாக கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, “எனது பெயரில் முகநூலில் போலி கணக்கு உள்ளது. இதனை யாரும் ஊக்கப்படுத்த வேண்டாம்“ என்றார்.இதையடுத்து அம்பிகாவுக்கு வலைத்தளத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து கருத்துக்கள் பதிவிட்டனர். போலி கணக்குகள் வைத்துள்ளவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கும்படியும் அம்பிகாவை வற்புறுத்தினர். 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்த அம்பிகா தமிழ் மலையாளம், கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.