மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி வீடியோ!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வந்த “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்யும் வேகத்துடன் பணிகள் நடைபெற்று வந்தன. ஊரடங்கிற்கு முன்னதாகவே படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது.

ஆனால் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் சிறிது பென்டிங்கில் இருந்த காரணத்தினால் படத்தை தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

மேலும் மார்ச் கடைசி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாஸ்டர் போஸ்ட் புரடக்சன் பணிகள் தாமதமாகின. இருந்தாலும் கூட டெக்னீசியன்களை வீட்டிலேயே வைத்து இயக்குனர் லோகேஷ் வேலை வாங்கி வந்ததாக கூறுகிறார்கள்.இந்நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகளுக்கு தளர்வுகள் கிடைத்த நிலையில் மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால் திரையரங்ககளை திறக்க தமிழக அரசு தொடர்ந்து தடை விதித்து வருகிறது.

அடுத்த மாதம் துவக்கத்தில் திரையரங்குகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.அப்படி திரையரங்குகளில் திறக்கப்பட்டால் முதல் படமாக மாஸ்டரை ரிலீஸ் செய்ய வேலைகள் நடைபெற்று வருகின்றன.