குயின் 2ம் பாகம் மேலும் பரபரப்பாக இருக்கும்; ரம்யா கிருஷ்ணன்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

குயின் இணையத் தொடரின் 2 - ம் பாகம் மேலும் பரபரப்பாக இருக்கும் என நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார் . மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மையப்படுத்தி அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து இணையதள தொடரை இயக்கியுள்ளார்கள் , கௌதம் மேனன் பிரசாந்த் முருகேசன் . ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன் . இந்த இணையத் தொடரை மும்பையைச் சேர்ந்த எம்எக்ஸ் பிளேயர் நிறுவனம் இணையதளத்தில் முழுவதுமாக வெளியிட்டுள்ளது . இந்நிலையில் குயின் 2 - ம் பாகம் குறித்து ரம்யாகிருஷ்ணன் கூறியதாவது : புத்தகத்தின் அடிப்படையில் குயின் இணையத் தொடர் உருவானது . ஜெயலலிதாவின் வாழ்க்கையை முன்வைத்து எடுக்கப்பட்டது என நினைப்பது உங்கள் விருப்பம் . ஜெயலலிதாவின் வாழ்க்கைச் சம்பவங்களுடன் ஒத்துப்போவதால் குயின் இணையத் தொடர் எனக்குப் பிடிக்கும் . அவருடைய துணிச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும் நிஜராணியாகவும் அவர் வாழ்ந்துள்ளார் . இணையத் தொடரில் சக்தி கதாபாத்திரம் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை . முதல் பாகத்தின்படி அரசியலுக்குள் நுழைந்துள்ளார் . முதல் பாகத்தில் பேட்டி எடுக்கும் காட்சியை ரசித்து செய்தேன் . கேள்விகளும் பதில்களும் எழுதப்பட்ட விதம் பிடித்திருந்தன . குயின் இணையத் தொடரின் 2 - ம் பாகத்துக்காக நான் காத்திருக்கிறேன் . அதில் பங்குபெற ஆவலாக உள்ளேன் . என்று குறிப்பிட்டுள்ளார்.