நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘ஆறு மாத காலமாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருந்துவந்துள்ளார். அவருடைய உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வுகள் தற்கொலை என்பதை உறுதிப்படுத்துகிறது.இதுவரையில், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள், அவரது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், சமையற்காரர்கள் இருவரும், வீட்டு வேலை செய்யும் நபர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருந்துள்ளனர்அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, சுஷாந்த் சிங் ராஜ்புட்டிடம் முன்னாள் மேலாளராக இருந்தவர் திஷா சலியன். அவருக்கு வயது 25. கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த அவர், மும்பையில் வசித்துவந்தார். திஷாவுக்கு ரோஹன் ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தநிலையில் அவருடன் தான் வசித்து வந்தார். அவர், ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. திஷா தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துவருகின்றனர். இந்தநிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பவித்ரா ரிஸ்தா என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், 2013ம் ஆண்டு வெளிவந்த கை போ ஜி படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். 2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  திரைப்படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் அசரவைத்தது. தோனியின் ஸ்டைஸ், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்ட முறை என்று அவரின் அனைத்தையும்  கண் முன்னே கொண்டுவந்திருப்பார். அப்படத்தில், வாழ்வில் இளைஞர்கள், தங்களது ஆசையையும் லட்சியத்தையும் அடைய கடுமையாக போராட வேண்டும் என இளைஞர்களுக்கு உணர்த்திய நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் கடந்த 2019ம் ஆண்டு தனது வாழ்வின் 50 கனவுகளை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அதனை நிறைவேற்றி கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதில், விமானத்தை இயக்க வேண்டும், சிறு குழந்தைகள் விண்வெளி குறித்து அறிந்துகொள்ள உதவ வேண்டும், கைலாய மலையில் தியானம் செய்ய வேண்டும், வெடிக்கும் எரிமலை அருகே படம்பிடிக்க வேண்டும், 1000 மரங்கள் நட வேண்டும், பண்ணை தொழில் செய்ய கற்க வேண்டும், லம்போர்கினி கார் வாங்க வேண்டும், விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும்,  இலவச புத்தகங்கள் கிடைக்க சேவை செய்ய வேண்டும், உள்ளிட்ட 50 கனவுகளை நடிகர் சுஷாந்த் வெளியிட்டு இருந்தார். தான் குறிப்பிட்ட 50ல் 12 கனவுகள் நிறைவேற்றிய நடிகர் சுஷாந்த் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் டுவிட்டரில் பதிவுகள் ஏதும் செய்யவில்லை. கடைசியாக 2019 டிசம்பர் 27ம் தேதியன்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவரின் மீதி கனவுகளை நிறைவேற்றினாரா என்பதும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.