கொரோனா தொற்று குணமாகாமல் வீடு திரும்பிய பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பியார் துனே கியா, கியா யே ரிஷ்டா கியா கெஹ்லாத ஹே, டிவிஸ்ட்வாலா லவ், சில்சிலா பியார் கா, பியர் பைல்ஸ் உள்பட மேலும் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். பிரபுதேவாவுடன் ஏபிசிடி படத்திலும் நடித்துள்ளார்.டேராடூனில் வசிக்கும் மோகனா குமாரி சிங்குக்கும் அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 7 பேருக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மோகனா குமாரி சிங் கூறும்போது, எனது மாமியாருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது.

இதனால் குடும்பத்தோடு பரிசோதனை செய்தோம். அப்போது அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது“ என்றார். இந்த நிலையில் கொரோனா குணமாகாமலேயே மோகனா குமாரி சிங்கை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மோகனா குமாரி சிங் கூறும்போது, “ஆஸ்பத்திரியில் இருந்து நான் வீட்டுக்கு திரும்பி விட்டேன். எனக்கு இன்னும் கொரோனா இருக்கிறது. வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். இது குணமாக எத்தனை நாட்கள் ஆகுமென தெரியவில்லை“ என்றார்.