தோனியின் ஓய்வு அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது - கேப்டன் அய்யா விஜயகாந்த்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தோனியின் ஓய்வு அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. உலக நாயகன் முதல் கடைக்கோடி கிரிக்கெட் ரசிகர்கள் வரை பலரும் தங்களது எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர்.ஒரு முறையான உபசரிப்பு கூட இல்லாமல் அவர் வெளியிருவது பலரை கண்கலங்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. ஆனால் தோனி கிரிக்கெட் என்ற ஒரு தளத்தை மட்டுமே விட்டுச்சென்றுள்ளார் அவர் என்றும் எங்களோடு எங்கள் மனதிலே பயணம் செய்வார் என்கின்றனர் அவருடைய ரசிகர்கள் பலர். மேற்குறிப்பிட்டது போல கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று பலரும் அவரை பாராட்டுவது அவர் இத்தனை ஆண்டுகாலம் இந்த இந்திய அணிக்கு ஆற்றிய அரும் பணியை மேற்கோளிட்டு காட்டுகிறது.அவர் மீண்டும் ஏதோஒரு விதத்தில் திரும்ப வரவேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்க அதுகுறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார் சினிஉலக கேப்டன் அய்யா விஜயகாந்த் அவர்கள். அவர் வெளியிட்ட பதிவில் "தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்

"Captain Dhoni - A Cool and Great Captain" என்று குறிப்பிட்டுள்ளார்.