தலைகீழாக லிப் லாக் முத்தம் கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரின் அட்டகாசமான போட்டோ!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்திரை ‘நெஞ்சம் மறப்பதில்லை' தொடரின் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை நிஷா.அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.நடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை பிரபலப்படுத்தியது.குழந்தை பிறந்த பின்னர் நிஷா, எந்த தொடரிலும் நடிக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிஷா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது கணவருடன் பங்கி ஜம்ப் செய்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அந்தரத்தில் தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து இருக்கிறார்.அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.