எம்.ஜி.ஆரின் மறுவுருவமாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மீது வழக்கு?

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கடந்த சில நாட்களாக விஜய், ரஜினி, சூர்யா என சினிமா நடிகர்களுக்கும் தமிழக முதல்வருக்கும் கூட வித்தியாசமான போஸ்டர்களை ஒட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.விஜயின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல வகையான சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். அதன்படி, தேனியில் விஜயின் உருவப்படத்தை எம்ஜிஆராக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அதில், விஜய் தமிழகத்திற்கு தலைமையேற்க வேண்டும் என்றும் 2021ல் உங்கள் வரவை காணும் தமிழகம் என்ற வாசகங்கள் இடம்பிடித்திருந்தன.இதற்கிடையே, இந்தப் போஸ்டர்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கிழித்தெரிந்துள்ளனர். மேலும், போஸ்டர் ஒட்டியது தொடர்பாக விஜய் ரசிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.