காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

உடல்நலக்குறைவால் காலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியும் வழங்கினார்.காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று மதியம் 2 மணி அளவில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்