திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறப்பு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதவி வகிக்க உள்ளனர்.இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலக திறப்பு விழாவில் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.முன்னதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் புதிதாக படம் தயாரிக்கும் முக்கிய நபர்கள் ஒன்றிணைந்து புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.