சூர்யாவுக்கு எதிராக போராட்டம் புகைப்படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.மத்திய, மாநில அரசுகளை திட்டி தீர்த்த சூர்யா நீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என்று நீதித்துறையை சேர்ந்த சிலர் கண்டனம் தெரிவித்த நிலையில் சூர்யாவின் கருத்தில் உள்நோக்கம் இல்லை என்று அதே நீதித்துறையை சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்தனர். இப்படி நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது.இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த சூர்யாவுக்கு எதிராக திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணி போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் எங்களால் தேர்ச்சி பெற முடியும் என்றும் தமிழக மாணவர்கள் திறமையற்றவர்கள் என்று பேசிய சூர்யாவிற்கு கண்டனம் என்றும் அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். சூர்யா படத்தை எரிக்க முயன்றதால் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.