சமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டு வருவார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் ஆகிவிட்டது என்று கூறி இருந்தார். அதன் பிறகு சற்று நேரம் கழித்து டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து நீக்கிவிட்டார் பூஜா. ஆனாலும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர்.இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் கமெண்டில் சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.இதனால் இருவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக சண்டை போட்டுக் கொண்டனர்.