அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்து 1978ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘அவள் அப்படித்தான்.‘ இதில் ஸ்ரீப்ரியா கதாநாயகியாக நடித்து இருந்தார். ரஜினிகாந்த் விளம்பர நிறுவனம் நடத்துபவராகவும் அவரது அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக ஸ்ரீப்ரியாவும், கமல்ஹாசன் ஆவணப்பட இயக்குனராகவும் நடித்து இருந்தனர்.வாழ்க்கையில் விரக்தியாக இருக்கும் ஸ்ரீப்ரியா மீது கமல்ஹாசனுக்கு மலரும் காதலும் அது நிறைவேறியதா என்பதும் கதை. படத்தில் இடம் பெற்ற உறவுகள் தொடர்கதை, பன்னீர் புஷ்பங்களே ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படத்துக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. ஸ்ரீப்ரியாவும் விருது பெற்றார். அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் செய்யப்போவதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அறிவித்து உள்ளார். இவர் அதர்வா, சமந்தா ஜோடியாக நடித்த பாணா காத்தாடி படத்தை இயக்கியவர்.தற்போது பிளான் பண்ணி பண்ணனும் படத்தை டைரக்டு செய்து வருகிறார். பத்ரி வெங்கடேஷ் கூறும்போது, “அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிம்புவையும் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் துல்கர்சல்மான், ஸ்ரீப்ரியா வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோரையும் நடிக்க வைக்க விருப்பம் உள்ளது. கதையின் ஜீவன் கெடாமல் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து திரைக்கதை உருவாக்கி உள்ளேன், இளையராஜா இசையமைத்தால் படத்துக்கு பெரிய பலமாக அமையும்” என்றார்.