லாபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது – விஜய் சேதுபதி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

“லாபம்” திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். அத்துடன்  இமான் இசையமைத்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் ட்ரெய்லர் வெளியானது.சமீப காலமாக முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்ற நிலையில், விஜய் சேதுபதியின் இந்த திரைப்படமும் ஒடிடியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி லாபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.