தற்கொலைக்கு யார் காரணம் ? காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேமந்த் ரவி மற்றும் தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தம் தான் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் சென்னை நசரத்பேட்டை உள்ள தனியார் விடுதியில் தனது கணவர் ஹேமந்துடன் தங்கி இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு இரவு 2.30 மணி அளவில் வந்த சித்ரா அதிகாலை 5 மணியளவில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டதாக நசரத்பேட்டை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஹேமந்த் – சித்ரா இருவரும் பெற்றோர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இதனால் சித்ரா திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் அவர் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவடைந்து நேற்று உடல் தகனம் செய்யப்பட்டது.இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு ஹேமந்த் ரவி சென்று சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். அதைப்போல ஒரு குடித்துவிட்டு அடிக்கடி சித்ராவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பிரிந்து வந்து விடுமாறு சித்ராவின் தாயார் விஜயா ஒருபுறம் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். எனவே கணவர் மற்றும் தாயார் இருவர் மத்தியிலும் சிக்கிக்கொண்டு தவித்த சித்ரா அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சித்ராவின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டுள்ளதால் அவரது செல்போனை சைபர் கிரைம் ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். அத்துடன் மூன்றாவது நாளாக கணவர் ஹேமந்த் ரவியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.