இன்று தொடங்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

முல்லை’ யாக நடித்து வந்த நடிகை சித்ரா இல்லாமல் இன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீரியல் நடிகை சித்ரா நேற்றுமுன்தினம் தற்கொலை செய்துகொண்டார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் படப்பிடிப்புக்காக தங்கியிருந்த சித்ரா நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவின் கன்னத்தில் நக கீறல்கள் இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதேபோல் சித்ராவின் தாய் விஜயா, சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவி அவரை அடித்து கொன்றுவிட்டதாக கூறினார்.இதை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் அவருக்கு கணவர் ஹேமந்த் மற்றும் தாய் விஜயா கொடுத்த அழுத்தம் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில் மறைந்த நடிகை சித்ரா இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு இன்று நடைபெறவுள்ளது. சென்னை நசரத் பேட்டையில் நடைபெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செட்டில், சித்ராவின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடங்கவுள்ளனர். முல்லை என்ற கதாபாத்திரத்தில் தனது அழகான எதார்த்த நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போட்ட சித்ரா அவரது ரசிகர்களுக்கு சோகத்தை மட்டுமே நினைவு பரிசாக விட்டு சென்றுள்ளார்.முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இனி யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் வெகுவாக எழுந்துள்ளது. ஆனாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்றால் நிச்சயம் இல்லை என்ற பதிலே ஒலிக்கும். ஒருவேளை முல்லை கதாபாத்திரம் சீரியலிலும் இறந்தது போல காட்டினால் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.