அனிதா. ‘நன்றி’ சொல்லி ஏற்றுக்கொண்ட கமலிடம் ‘எங்களைப் பாராட்டவே இல்லையே!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிக்பாஸ் சனிக்கிழமை என்றாலே கமல் சில பஞ்சாயத்துகளைக் கையில் எடுக்கும் நாள். நேற்று புரோமோமில் கமல் வேறு செம பில்டப் கொடுத்திருந்ததால், காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்பவே இருந்தது. அதைப் பற்றிக் கட்டுரையில் பார்ப்போம்.இந்த சீசனில் வேக்கப் சாங் போடும் பொறுப்பு 2K கிட்ஸிடம்தான் நிச்சயம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், வழக்கமான பாடல்கள் இம்முறை ஒலிக்கவே இல்லை. நேற்றுகூட பிகில் படத்தின் தீம் மியூஸிக்தான் ஒலித்தது. இந்த சீசனில் பாராட்டத்தகுந்த ஓரிரு விஷயங்களில் இதுவும் ஒன்றுசோம்ஸை ஏதோ சொல்லி கிண்டல் செய்துவிட்டாராம் நிஷா. அதற்காக ஒருவருக்கொருவர் கோபித்துக்கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டார்கள். நிஷாவுக்கு அர்ச்சனா சப்போர்ட், சோம்ஸ்க்கு ரியோ சப்போர்ட் என சூழல் மாறியது. மற்றப்படி பெரியதாகச் சொல்லும்படி இல்லை.சனிக்கிழமைகுருப்பிஸம் காட்டாதீங்கன்னு சொன்னா கேட்கவே மாட்டேங்குறாங்க… அதனால இந்த வாரம் ரெண்டு எவிக்‌ஷன்… அதுல ஒண்ணு இன்னிக்கே’ என்ற அறிவிப்போடு வீட்டுக்குள் நுழைந்தார்.‘டிரஸ் நல்லா இருக்கு’ எனும் சடங்கை இன்று ஆரம்பித்தவர் அனிதா. ‘நன்றி’ சொல்லி ஏற்றுக்கொண்ட கமலிடம் ‘எங்களைப் பாராட்டவே இல்லையே’ எனக் கேட்டு ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டு வாங்கிக்கொடுத்தார் ரம்யா. உங்களைச் சொல்லலணும்னுதான் என்னை கேட்கிறீங்களோ என்ற சந்தேகத்தை உடைத்துவிட்டார் கமல்.கால் செண்டர் விளையாட்டில் விட்டுக்கொடுத்த 3 பேரும் மாட்டிக்கொண்டுவிட்டார்களே என்று எவிக்‌ஷனின் நாமினேஷன் லிஸ்ட் மாறியதை விசாரித்தார். அப்படியே கேப்டன் ரமேஷ் பற்றி விசாரணையில், ’தனக்கு கண் வலி. அதனால் துணை கேப்டன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டதாகவும், துணை கேப்டனை விசாரிக்கிற வேலை மட்டும்தானே கேப்டனுக்கு’ என வித்தியாசமாக விளக்கம் கொடுத்தார்.துணை கேப்டன் தனக்கு வந்தபோது பாலா மறுத்த காரணம், ‘நானே ரொம்ப நேரம் தூங்குவேன். தூங்குற ஆளை எழுப்புற வேலை எனக்கு வேணாம்’ என்பதுதான். ஆனால், நேற்று மாற்றி சொன்னார்.அதிக நேரம் தூங்குவதக அனிதாவை குறைச் சொல்ல, அவரின் முகம் மாறியது. ஆனால், இன்றைக்கு அனிதாவுக்காக கமல் வாதாட இருப்பது அவருக்குத் தெரியவில்லை.இடைவேளைக்குப் பிறகு அர்ச்சனா – நிஷா டாஸ்க்கில் மோதிக்கொண்டது பற்றி விசாரித்தார். ‘இங்கே விளையாடுவது நீங்க… வெளியே உள்ள குடும்பத்தினர் பற்றி இழுக்காதீர்கள் என்று போன வாரம்தானே சொன்னேன். ஏன் அப்படி செய்தீர்கள்?” என கேட்க, வழக்கமான பதிலை நிஷா சொல்ல, நிஷாவை மன்னிச்சிட்டேன் என அர்ச்சனா தாயுள்ளத்தோடு சொல்ல, கொஞ்சம் இழு இழு என இருந்தது.அடுத்து ரியோவின் காலில் விழுந்து அவரைச் சிரிக்க வைக்க அர்ச்சனா முயற்சி செய்தது பற்றிய விசாரணையில், ‘வெற்றிக்காகக்கூட மற்றவர் காலில் விழாதீர்கள்’எனச் சொன்னது செம.இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் என கமல் சொன்னதும், அனிதா ஜாலியாக கவலைப்பட்டார். ஏனெனில், இந்த வாரம் அவர் எவிக்‌ஷன் பட்டியலில் இல்லை. சீனாவில் ஏதோ நோய்கிருமியாமே… கண்டதையும் தின்னா அப்படித்தான் என்று இங்கே போற போக்கில் கவலைப்படுவார்களே… அப்படியான தோரணை அனிதாவிடம் வெளிப்பட்டது.இரண்டு எவிக்‌ஷன் என்றதுமே ‘நான் வெளியேறிவிடுவேன் என நிஷா சொல்லிக்கொண்டிருந்தார். அதுவும் அர்ச்சனா பஞ்சாயத்து வெளியே வேறு விதமாகப் புரிந்துள்ளது என்றதுமே தான் வெளியேறுவது உறுதி என்று உறுதியானார்.அனிதாவை சுவாரஸ்யமில்லாதவர் எனத் தேர்ந்தெடுத்த பஞ்சாயத்து வந்தார் கமல். அனிதா எப்படி ரியோவின் ஒரு காரணத்தை மட்டுமே சொல்லி தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக நினைக்க வைத்தாரோ, கமல் பஞ்சாயத்திலும் அப்படியே எதிரொலித்தது. அனிதாவுக்கு சுரேஷ் எப்படி எதிர்ப்போட்டியாளர் என்ற பிம்பம் ஏற்பட்டதோ… அதே பிம்பம் தற்போது ரியோவுக்கு வர வழைக்கப்படுகிறது. அனிதா தெரிந்தோ தெரியாமலோ இந்த ஹீரோ vs  வில்லன் பாத்திர அமைப்புகளைக் கட்டமைக்கிறார். ஏனெனில், சுரேஷ் போகிற போக்கில் சொன்னது, செய்திவாசிக்கும் ஒருவர் வணக்கம் சொன்னா எச்சில் தெறிக்கும் என்பது. அதை வைத்து சுரேஷை வில்லனாக்கியது அனிதா. இப்போது அது ரியோவுக்கும் மாறுகிறது என்றும் சொல்லலாம்.இந்தப் பஞ்சாயத்தில் அனிதாவின் பக்கம் கொஞ்சம் நியாம் உண்டு என்றாலும், நான் மட்டுமே 12 பேருக்கு சமைத்தேன் என்பது சரியானது அல்ல. அவர் சென்ற வார கேப்டனும்கூட. அர்ச்சனா சொன்னதுமாதிரி ஒழுங்கா ப்ளான் பண்ணினால் சமையலை குறிபிட்ட நேரத்தில் முடித்திருக்கலாம். மேலும், அவர் கேப்டன் என்பதால் ஒரு டீமின் முழு பொறுப்பையு அவர் ஏற்றிருக்கக் கூடாது. அப்படி எடுத்துக்கொண்டு இப்போது அதற்கு ‘நானே ரொம்ப பாவம்’ என்பதாக பரிதாபத்தை எதிர்பார்க்கக் கூடாது,ஆனால், கமல் ரொம்ப ஸ்ட்ராங்கான வழக்கறிஞர், அதுவும் போட்டியாளர்கள் எதிர்த்து பேசப்பயப்படும் வழக்கறிஞர் என்பதால் மீண்டும் போரீங் செலக்‌ஷன் வைத்து நிஷா ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். அனிதா ஹேப்பி அண்ணாச்சி.எவிக்‌ஷன் சடங்குக்கு வந்தார் கமல். ஸ்டோர் ரூமில் சோம்ஸையும், கன்வெக்‌ஷன் ரூமில் ரமேஷையும் செல்ல சொன்னார். இருவரில் ஒருவர் வெளியேறுவார் என்று அவர் சொன்னதுமே அது ரமேஷ்தான் என்று புரிந்தது. ஆனால், அவரை வெளியேற வைத்து, ‘கன்வெக்‌ஷன் ரூம்க்கு சோம்ஸை வர வழைத்து ஒரு ஷாக்கிங் எக்ஸ்பிரஸனை போட்டியாளர்களிடம் எதிர்பார்க்கலாம் என்று நினைத்த பிக்கிக்கு பல்புதான் கிடைத்தது. ரமேஷ் வெளியேற்றப்பட்டார். வழக்கம்போல வெளியே வந்தும் ரெஸ்ட்டுதான் எடுக்கப்போகிறார் என்று சோஷியல் மீடியாவில் ஓட்டித்தள்ளுகிறார்கள்.அடுத்தது நான்தான் என்று நிஷா புலம்பிக்கொண்ட்டிருந்தார். அதுதான் நடக்கும் என பட்சிகள் சொல்கினறன. இன்னும் சில மணி நேரத்தில் அது தெரிந்துவிடும்.