சர்ச்சையில் சிக்கினார் நடிகை சாய் பல்லவி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி, இயல்பான நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்ததினால் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடிக்க  ஆரம்பித்தார்.தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமான இவர் படங்களிலும் நடன திறமையை நன்றாக காட்டக்கூடியவர்.இந்நிலையில் மலையாள திரை உலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கு உள்ள வேறுபாட்டை சமீபத்தில் அவர் அளித்த  நேர்காணலொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.குறித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “மலையாளத் திரையுலகில் அனைவரையும் ஒரே மாதிரி சமமாக நடத்துகிறார்கள்.ஆனால் தெலுங்கு திரை உலகில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அக்கறை காட்டுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு சாய் பல்லவி தெரிவித்துள்ள கருத்து தெலுங்கு திரை உலகில் பிறமொழி நடிகைகளுக்கு சமமான மரியாதை கொடுப்பதில்லை என்பது போன்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.