தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அருண் விஜய் மகன் நடிகராக அறிமுகமாக உள்ளார்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று படத்தையும் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது.இந்நிலையில், சூர்யா தயாரிக்கும் 8-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி குழந்தைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாராக உள்ளது. இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்க உள்ளார். இதில் கோபிநாத் ஒளிப்பதிவாளராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும், மேகா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப்படத்தின் மூலம் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் பல்வேறு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.