சித்ரா மரண வழக்கு : குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகை சித்ராவின் மரண வழக்கு குறித்து ஆர்டிஓவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு அவரது குடும்பத்தினர் ஆஜராகியுள்ளனர்.சித்ராவின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த்திடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லி வருவதாகவும், அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.