
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் நயன்தாரா.
இவரின் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் மிரட்டலாக உருவாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நிழல் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் என இரு படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா இதுவரை தமிழ் திரையுலகில் உள்ள அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ஆனால் உலக நாயகம் கமல் ஹாசனுடன் மட்டும் இதுவரை ஜோடியாக நடிக்கவில்லை. அதுமட்டுமின்றி, பல முறை கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் நிராகரித்து விட்டாராம் நடிகை நயன்தாரா.
இந்நிலையில், கமல் படங்களில் அதிக அளவு நெருக்கமான மற்றும் முத்தக்காட்சியில் இடம்பெறுவதால், கமலுக்கு ஜோடியாக நடிக்க தவிர்த்து விட்டாரோ என கோலிவுட் வட்டாரங்களில் கேள்விகள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் சமூக வலைத்தளங்களில் 100 கோடி கொடுத்தாலும், அவருடன் நயன்தாரா நடிக்க மாட்டார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.