வைரலாகும் நடிகர் துல்கர் சல்மான் எழுதியுள்ள காதல் கடிதம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய 9 ஆவது திருமண தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள காதல் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.குறித்த கடிதத்தில், “இனிய மகிழ்ச்சியான 9 வருடங்கள் பூ. ஒரு தசாப்தத்தை நெருங்குகிறோம். எப்படி இது என ஆச்சரியமாக இருக்கிறது.  நெருக்கமாக உறுதியாக வளர்கிறது நம் உறவு.  பல தசாப்தங்களாக நாம் தந்திரமாக வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் எப்போதும் ஒருவரையொருவர் தாங்கிப்பிடிக்கிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிறோம்  ஒன்றாக வலுவாக நிற்கிறோம். நீ என் ஹாலண்டேஸ்  என் சாண்டிலி கிரீம்,  என் ட்ரப்புல்,  என் சோயா என் வசாபி,  மற்றும் என் ஹரிசா. நான் உன்னை நீண்ட காலம் நேசிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.