நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இந்த செய்தியை உறுதி செய்த நஸ்ரியா “சில ஜோக்கர்கள் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டார்கள்.அதனால் சில நாட்கள் என் அக்கவுண்டில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.திருமணத்தின் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.