மனஅழுத்தம் காரணமாக கன்னட நடிகை தற்கொலை

Print yarlcine.com in சினிமா செய்திகள்

: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை  ஜெயஸ்ரீக்கு அவ்வளவாக திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில்  விரக்தியடைந்து காணப்பட்டார். பல முறை  நண்பர்களிடம் திரைப்பட வாய்ப்பு  கிடைக்கவில்லையென்று புலம்பினார். சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ பிரகதிலே அவுட்டில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.இந்நிலையில் நேற்று  முன்தினம் இரவு வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு சென்ற அவர்  காலை வெகுநேரமாகியும்  கதவை திறக்கவில்லை. சந்தேகத்தில் மறுவாழ்வு மைய ஊழியர்கள் கதவை உடைத்து  பார்த்த போது அவர் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். மாத நாயக்கனஹள்ளி போலீசார் விசாரணையில் கன்னட திரையுலகின் மன அழுத்தம் தான்  காரணம் என்பது தெரியவந்தது.