பிரச்சாரத்திற்கு தயாராகும் நடிகர்கள் விமல், சூரி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு நடிகர்களை பிரச்சாரத்துக்காக தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளையும் தற்போது திமுக தொடங்கி இருக்கிறது. இதன்காரணமாகத்தான் கடந்த 12.09.20 அன்று மணப்பாறையில் உள்ள பிரபல நடிகர் விமலின் வீட்டுக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு சென்றார். அவருடன் சிறிய ஆலோசனைக்கு பின்பாக அங்கிருந்து சென்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று நடிகர்கள் விமல், புரோட்டா சூரி ஆகிய இருவரும் இன்று திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்து சென்றுள்ளனர்.விமலும், சூரியும் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.