எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பாடும் நிலா எஸ்பிபி மறைவை அடுத்து இந்தியா முழுதும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி படக்குழுவுடன் பாடகர் எஸ்பிபி-க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மறைந்த எஸ்பிபி, சனிக்கிழமை அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டார். காலமானார். பலவேறு திரையுலக பிரபலங்கள் அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மெட்ரோ இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் பாட்டுடைத் தலைவன் எஸ்பிபி-க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.விஜய்யின் ஆண்டனி நடிக்கும் இந்தப் படம் ஊரடங்கிற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் பட வேலைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தில் மீசைய முறுக்கு படத்தில் நடித்த ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர்.