அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி.ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் இன்று துவங்கியது.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரகாஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மியா யுக்தா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் கலை இயக்குநர் கிரண், போஸ் வெங்கட், K.P.Y. பாலா, அமுதவாணன், வில்லனாக அஜய் கண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சிவ சாரதி, இசை – விக்கி மற்றும் ஹரி, படத் தொகுப்பு – ராம்நாத், கலை இயக்கம் – பழனி குமார், சண்டை இயக்கம் – ரக்கர் ராம்.

சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி சென்னை, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற உள்ளது.

இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குநர்கள் K.பாக்யராஜ், விஜய் மில்டன், சரவணன், பார்த்திபன், தயாரிப்பாளர் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், ஜாகுவார் தங்கம், P.R.O. டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கேப்டன் டிவியின் மக்கள் தொடர்பாளர் எம்.பி.ஆனந்த் தயாரிக்கும் படத்தை தயாரிப்பாளர் எல்.கே.சதீஷ் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.