பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த ஒரு வார காலமாக தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆட்டம், பாட்டம் உற்சாகம் என களைகட்டிய பிக்பாஸ் வீட்டில் பல்வேறு பரிசு பொருட்களும் நிறைந்தது. இருப்பினும் ஆங்காங்கே சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்தது. அதை இந்த வார இறுதியில் கமல் தீர்த்து வைப்பார் என்று சொல்லப்பட்டது.அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் தோன்றிய கமல் ஹாசன் ஹவுஸ்மேட்ஸ், விருப்பப்பட்ட வசனங்களையும் பாடல்களையும் பாடி அவர்களை மகிழ்ச்சி ஊட்டினார். அத்துடன் அனிதா பக்கம் திரும்பிய அவர், அனிதா சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அதிக உணர்ச்சி வசப்படுவதை சுட்டிக்காட்டினார்.இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கமல் ஹாசன், இந்த வாரம் முழுவதும் சுவாரசியம் இல்லாத ஹவுஸ்மேட் ஒருவரை தேர்வு செய்யச் சொல்ல ரமேஷ் பாலாவை தேர்வு செய்கிறார். அத்துடன் பாலா கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக இருந்ததாக சொல்கிறார். அதற்கு பதிலளிக்கும் பாலா சுவாரசியம் குறைவாக இருந்ததாக சொல்லப்படும் பட்சத்தில் கடந்த ஐந்து டாஸ்க்களில் நான் 4 போட்டியில் வெற்றி பெற்று உள்ளேன் என்று தனது பக்க நியாயத்தை கூறுகிறார் . அப்போது கமல் ஹாசன் இதை நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்கும் படியாக ப்ரோமோ முடிகிறது.