கூகுளில் அதிகம் தேடப்பட்ட ராஷ்மிகா

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியை சேர்ந்தவர், ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் தேவதாஸ், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அல்லு அர்ஜூன் ஜோடியாக புஷ்பா, தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் ஆகிய படங்களில் நடிக்கிறார். தற்போது அவர், 2020ல் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட இந்திய நடிகையாக மாறியுள்ளார்.நேஷனல் கிரஷ் ஆப் இண்டியா பதிவில் ராஷ்மிகாவின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு முன்பு நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா, தீபிகா படுகோன் ஆகியோர் முதல் இடத்தில் இருந்தனர். ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியது. வளர்ந்து வரும் நடிகைக்கு இவ்வளவு பணம் எங்கே இருந்து வந்தது? யார் இந்த ராஷ்மிகா என்ற ரசிகர்களின் தேடல் காரணமாக கூகுள் தளத்தில் அவர் முதல் இடத்துக்கு வந்திருப்பதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.