ரத்தம் சொட்ட சொட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த தல அஜித்..

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.வலிமை படப்பிடிப்பில் இருந்து மிக சுவாரசியமான தகவல்கள் வெளியாகி தல அஜித் மீது தனி மரியாதையை ஏற்படுத்தி உள்ளது.ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் பயங்கர வேகத்தில் வந்த தல அஜீத் திடீரென நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து விட்டாராம்.பின்னர் எழுந்து பார்த்தபோது கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் தோலுரிந்து ரத்தம் கொட்டி உள்ளது.இருந்தபோதிலும் அதனை பெரிதும் பொருட்படுத்தாமல் மேலும் இரண்டு நாட்கள் இருந்து மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்த பிறகுதான் சென்னை வந்துள்ளார் தல அஜித்.இந்த தகவல் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுவரை தல அஜித்தை பிடிக்கவில்லை என்று சொன்னவர்கள் கூட இதனைக் கேட்ட பிறகு அவரின் மீது தனி மரியாதை ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் பேசுவதைப் பார்க்க முடிகிறது.