கார்த்தியின் ‘சுல்தான்’ பட வேலைகளை சைலன்டாக செய்து முடித்த யுவன்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டிரெய்லருக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில், டிரெய்லருக்கு மட்டும் யுவன் இசையமைத்திருந்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்திய தகவல் படி சுல்தான் படத்திற்கும், யுவன் தான் பின்னணி இசை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பதால் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர், பின்னணி இசை அமைத்தால் படத்திற்கு பலமாக இருக்கும் எனக்கருதி படக்குழு இந்த முடிவை எடுத்தார்களாம்.