சேதுராமனின் முதலாமாண்டு நினைவு நாள்... மனைவி உருக்கமான பதிவு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் சேதுராமன். இப்படத்தை அடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் இயற்கை எய்தினார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்நிலையில் சேதுராமன் மறைந்து ஒரு வருடம் ஆனதையொட்டி அவரது மனைவி உமா சமூக வலைத்தள பக்கத்தில், “மா...அப்படிதான் நான் எப்போதும் உங்களை அன்பாக அழைத்திருக்கிறேன். இதுவரை உங்களை ஒருபோதும் பெயர் சொல்லி அழைக்கவில்லை. ஏனென்றால் எதிர்பார்ப்பில்லாமல் நீங்கள் இருப்பதற்காக நான் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன்.என்னைச் சுற்றி இருந்தது, நீங்கள் மட்டுமே. மீட்டிங், பயணங்கள், தினசரி நோயாளி அட்டவணை, பயிற்சி அமர்வுகள், உணவு, ஓய்வு என 4 ஆண்டுகளில் நான் எப்போதும் உங்களுக்கே முன்னுரிமை அளித்தேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவற்றைச் செய்ய எனக்கு தெரிந்த சிறிய வழிகளில் உதவினேன். நீங்கள் கனவு கண்டதை ஒருபோதும் நிறுத்தவில்லை. உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்கு நான் ஒருபோதும் மறுத்தில்லை” என்று பதிவு செய்துள்ளார்.