பிரபல நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார். கடந்த 24ம் தேதி இவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கே.வி.ஆனந்த் உயிரிழந்தார்.அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரபல நடிகர் செல்லதுரை (84) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது வீட்டிலேயே செல்லதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை அவர் இறைவனடி சேர்ந்தார். இவர் ராஜா ராணி, கத்தி, தெறி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.கடந்த 17ம் தேதி நடிகர் விவேக், இன்று காலை இயக்குனர் கே.வி.ஆனந்த், தற்போது நடிகர் செல்லதுரை என அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் செல்லதுரையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.