அழுகிறது..வருந்துகிறேன் நண்பா! - வைரமுத்து கண்ணீர்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த்(வயது54) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.வி.ஆனந்த், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கே.வி.ஆனந்துடன் பல படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ள கவிஞர் வைரமுத்து,திரையில்

ஒளிகொண்டு

சிலை செதுக்கினாய்!வாஜி வாஜி பாடலை

ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!என்

எத்தனையோ பாடல்களை

ரத்தினமாய் மாற்றினாய்!இதோ

உனக்கான இரங்கல்பாட்டை

எங்ஙனம் படம் செய்வாய்?விதவையான கேமரா

கேவிக்கேவி அழுகிறது

கே.வி.ஆனந்த்!ஒளியாய் வாழ்வாய்

இனி நீ.’’

-என்று தனது இரங்கலை கண்ணீர்க் கவிதையாக பதிவிட்டிருக்கிறார்.