ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்... குவியும் லைக்குகள்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.நடிப்பு, இசையைத் தவிர சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டைலான மாஸ்க்கை நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக தமிழ் பொண்ணு அணிந்து இருக்கும் மாஸ்க் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள்.