அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏகன் படத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார்.நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.