“சர்வர் சுந்தரம்” திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி அடுத்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். இவர்களோடு பிஜேஷ் கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன்,  ராதா ரவி, செஃப் தாமோதரன்,  வெங்கடேஷ் பட் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.