கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார்!- வைத்தியசாலை நிர்வாகம் தகவல்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தார்.இதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தார்.இந் நிலையில் அறுவை சிகிச்சைசெய்த காலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.இதனை தொடர்ந்து சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இது குறித்து வைத்தியசாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் ”கூறி இருப்பதாவது:-

கமல்ஹாசனுக்கு ஏற்கனவே சிகிச்சை  செய்யப்பட்ட வலது காலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வலது கால் எலும்பில் ஏற்பட்ட அந்த பாதிப்பை சரி செய்வதற்காக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. அவர் விரைவில் அதில் இருந்து குணமடைந்து வருவார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.