“எனது படங்களை பார்க்க விரும்ப மாட்டேன்” – சூர்யா

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சில நேரங்களில் தன்னுடைய  நடிப்பில் வெளியாகிய திரைப்படத்தைப் தான் பார்க்க விரும்புவதில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து தெரிவித்த அவர், “ மக்களுக்குப் படம் பிடிக்கும்போது அதை நான் ஏற்றுக்கொள்வேன். அவர்கள் என்னுடைய தவறுகளைப் பெரிய மனத்துடன் பொருட்படுத்தவில்லை என எண்ணிக்கொள்வேன்.என்னுடைய மனைவி ஜோதிகா, சகோதரர் கார்த்தியும் நடிகர்கள்தான். ஆனால் அவர்கள் என்னைப் போல் இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்களோ அதில் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்களுடைய வேலையைப் பிடித்து செய்வார்கள்.சில சமயம் என் படங்களை நான் மிகவும் விமர்சனம் செய்வேன். என்னுடைய திறமையைச் சரியாக வெளிப்படுத்தவில்லை இன்னும் உழைக்க வேண்டும் என்று எண்ணுவேன். என் பணிகளில் நான் கண்டிப்புடன் இருப்பேன்.நான் இப்படித்தான். நடிக்க வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.