கோப்ரா படப்பிடிப்பை நிறைவு செய்த ஸ்ரீநிதி ஷெட்டி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதியை நடித்து முடித்துள்ளார்.விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கோப்ரா படத்தில் விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் சில பகுதிகள் இருக்கின்றன. தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பின்னர் மீண்டும் கோப்ரா படப்பிடிப்பில் இணைவார் எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கோப்ரா படத்தில் தனது பகுதியை நிறைவு செய்துள்ளார். அதையடுத்து ஸ்ரீநிதி கோப்ரா படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்குகிறார். இப்படத்தில் இர்பான் பதான், மியா, கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், ரோஷன் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.