பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்பட ட்ரெஸ்ஸுக்கு இத்தனை கோடி செலவா?

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சச்சின் கெடேகர், பாக்யஸ்ரீ, முரளி சர்மா, பிரியதர்ஷி, சாஷா சேத்ரி, மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.ராதே ஷ்யாம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீஷர்  வெளியானது. டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.சமீபத்திய அப்டேட் என்னவென்றால், ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்கள் பிரபாஸின் ஆடைகளுக்கு மட்டும் பெரிய தொகையை செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆம், படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ.6 கோடி ரூபாய் வரை பிரபாஸின் காஸ்டியூமக்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ராதே ஷ்யாம் படம் முழுவதிலும் பிரபாஸ் பிரத்தேயேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளிலேயே வலம் வருவார். பிரபாஸின் ஆடைகளுக்காக சிறப்பு ஆடை வடிவமைப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனராம். எனவே பிரபாஸ் இதுவரை நடித்ததில் ஆடைகளுக்கு அதிகமாக செலவிடப்பட்ட படம் இதுவாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.