விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிருக்கும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிருக்கும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கவிருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் விஜய்யின் 65வது படமாகும் உருவாகும். இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் யோகிபாபு மற்றும் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிக்க உள்ளதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.தளபதி65 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சமீபத்தில் இந்தப் படத்திற்க்கான போட்டோஷூட் நடைபெற்றது. எனவே படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.