உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி! By aishwarya 25/02/2021 10:48:24 PM

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு மருத்துவர் என்றாலும், திரையுலகில் காமெடியன் கதாபாத்திரத்திலேயே பவர் ஸ்டார் நடித்தார்.கோலிவுட் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் இன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை. ஆனால் அவரது உடல்நிலையில் என்ன பிரச்னை என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.