சிங்கம் டைரக்டர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இயக்குநர் சரணிடம் உதவியாளராக இருந்தபோதே நடிகர் விஜயகுமார் மகள் பிரீத்தி விஜயகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.பிரசாந்த் நடித்த தமிழ் படத்தின் மூலம் இயக்குநர் ஆன ஹரி, சாமி, அருள், கோவில், வேங்கை, வேலு, தாமிரபரணி, ஆறு, சிங்கம் என்று வரிசையாக படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருக்கிறார்.தற்போது, மைத்துனர் அருண்விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஹரி. பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது உடன் இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், ஹரிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால், பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா பரிசோதனை செய்ததில் ஹரிக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது.