பிகினி உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷிவானி - வைரலாகும் புகைப்படம்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில், தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள, நடிகை ஷிவானி, அங்கு பிகினி உடையில் போஸ் கொடுத்தவாரு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.