ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழில் 2013ல் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.தற்போது பவுடர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஆபாசமாக கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு தயங்காமல் பதிலடி கொடுத்து இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.