ஓடிடி-யில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படத்தை வருகிற ஜூலை 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவின் சம்பளம் தவிர்த்து இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.5 கோடியாம். ஆனால் தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ரிலீசுக்கு முன்பாகவே ரூ.20 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளனர். நயன்தாரா நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்கபட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.