ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்திற்கு யு சான்றிதழ் - தணிக்கை குழு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர் தணிக்கை குழுவினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார்கள். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா காரணமாக வெளியாகாமல் இருந்தது.

இப்படத்தின் முதல் பாடல் மழை மழை வெளியாகி கவனித்த நிலையில், தமிழ் மொழி படத்திற்கு மட்டும் தற்போது 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.