நள்ளிரவு 12 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பீஸ்ட் பட இயக்குனர்!

Print yarlcine.com in விமர்சனம்

நடிகர் விஜய்யின் தற்போது அவரது 65-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

இப்படத்தை தற்காலிகமாக தளபதி65 என அழைத்து வந்தனர். இதற்கிடையே, இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

மேலும், நள்ளிரவு 12 மணிக்கு 2வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். இதனையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.